ஐங்குறு நூறு
201 - 205 of 500 பாடல்கள்
21. அன்னாய் வாழிப் பத்து
201. அன்னாய் வாழிவேண் டன்னை என்னை
தானும்
மலைந்தான் எமக்கும் தழையாயின
பொன்வீ
மணியரும் பினவே
என்ன
மரம்கொல்அவர் சாரல் அவ்வே.
விளக்கவுரை :
202. அன்னாய் வாழிவேண் டன்னை நம்மூர்ப்
பார்ப்பனக்
குறுமகப் போலத் தாமும்
குடுமித்
தலைய மன்ற
நெடுமலை
நாடன் ஊர்ந்த மாவே.
விளக்கவுரை :
203. அன்னாய் வாழிவேன் டன்னைநம் படப்பை
தேன்மயங்கு
பாலினும் இனிய அவர்நாட்டு
உவலை
கூவற் கீழ
மானுண்டு
எஞ்சிய கலிழி நீரே.
விளக்கவுரை :
204. அன்னாய் வாழிவேண் டன்னைஅஃது
எவன்கொல்
வரையர
மகளிரின் நிரையுடன் குழீஇப்
பெயர்வழிப்
பெயர் வழித் தவிராது நோக்கி
நல்லள்
நல்லள் என்ப
தீயேன்
தில்ல மலைகிழ வோர்க்கே.
விளக்கவுரை :
205. அன்னாய் வாழிவேண் டன்னையென் தோழி
நனிநான்
உடையள் நின்னும் அஞ்சும்
ஒலிவெள்
ளருவி ஓங்குமலை நாடன்
மலர்ந்த
மார்பின் பாயல்
துஞ்சிய
வெய்யள் நோகோ யானே.
விளக்கவுரை :