சிறு பஞ்ச மூலம் 1 - 5 of 98 பாடல்கள்



சிறு பஞ்ச மூலம் 1 - 5 of 98 பாடல்கள்

கடவுள் வாழ்த்து

1. முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம்
பழுதின்றி ஆற்றப் பணிந்து - முழுதேத்தி
நண்பாய ஞாலத்து மாந்தர்க்(கு) உறுதியா
வெண்பா உரைப்பன் சில.

விளக்கவுரை :

நூல்

2. ஒத்த ஒழுக்கம் கொலைபோய் புலால்களவோ(டு)
ஒத்த இவையல வோர்நாலிட்(டு) - ஒத்த
உறுபஞ்ச மூலந்தீர் மாரிபோல் கூறீர்
சிறுபஞ்ச மூலஞ் சிறந்து.

விளக்கவுரை :

3. பொருளுடையான் கண்ணதே போகம் அறனும்
அருளுடையான் கண்ணதே ஆகும் - அருளுடையான்
செய்யான் பழிபாவம் சேரான் புறமொழியும்
உய்யான் பிறர்செவிக்கு உய்த்து.

விளக்கவுரை :

4. கற்புடைய பெண்ணமிர்து கற்றடங்கி னான்அமிர்து
நற்புடைய நாடமிர்து நாட்டுக்கு - நற்புடைய
மேகமே சேர்கொடி வேந்தமிர்து சேவகனும்
ஆகவே செய்யின் அமிர்து.

விளக்கவுரை :

5. கல்லாதான் தான்காணும் நுட்பமும் காதிரண்டும்
இல்லாதாள் ஏக்கழுத்தஞ் செய்தலும் - இல்லாதான்
ஒல்லாப் பொருளில்லார்க்கு ஈந்தளியான் என்றலும்
நல்லவர்கள் கேட்பின் நகை.

விளக்கவுரை :

சிறு பஞ்ச மூலம், காரியாசான், siru pancha moolam, kaariyasaan, tamil books