ஐங்குறு நூறு
131 - 135 of 500 பாடல்கள்
14. பாணற்கு உரைத்த பத்து
131. நண்றே பாண கொண்கனது நட்பே
தில்லை
வேலி இவ்வூர்க்
கல்லென்
கௌவை எழாஅக் காலே.
விளக்கவுரை :
132. அம்ம வாழி பாண புன்னை
அரும்புமலி
கானல் இவ்வூர்
அலரா
கின்றுஅவர் அருளு மாறே.
விளக்கவுரை :
133. யானெவன் செய்கோ பாண ஆனாது
மெல்லம்
புலம்பன் பிரிந்தெனப்
புல்லென்
றனஎன் புரிவளைத் தோளே.
விளக்கவுரை :
134. காண்மதி பாண இருங்கழிப் பாய்பரி
நெடுந்தேர்க்
கொண்க னோடு
தான்வந்
தன்றுஎன் மாமைக் கவினே.
விளக்கவுரை :
135. பைதலம் அல்லேம் பாண பணைத்தோள்
ஐதுஅமைந்து
அகன்ற அல்குல்
நெய்தலம்
கண்ணியை நேர்தல்நாம் பெறினே.
விளக்கவுரை :
