சீவக சிந்தாமணி 1936 - 1940 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1936 - 1940 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1936. கரும்பின் மேல் தொடுத்த தேன் கலிகொள் தாமரைச்
சுரும்பின் வாய்த் துளித்தலின் துவைத்த வண்டொடு
திருந்தி யாழ் முரல்வது ஓர் தெய்வப் பூம் பொழில்
பொருந்தினான் புனை மணிப் பொன் செய் பூணினான்

விளக்கவுரை :

1937. பொறை விலங்கு உயிர்த்தன பொன் செய் மா மணிச்
செறி கழல் இளைஞரும் செல்லல் நீங்கினார்
நறை விரி கோதையர் நாம வேலினாற்கு
அறு சுவை நால் வகை அமுதம் ஆக்கினார்

விளக்கவுரை :

[ads-post]

1938. கட்டியின் அரிசியும் புழுக்கும் காணமும்
புட்டில் வாய்ச் செறித்தனர் புரவிக்கு அல்லவும்
நெட்டு இரும் கரும்பொடு செந் நெல் மேய்ந்து நீர்
பட்டன வள நிழல் பரிவு தீர்ந்தவே

விளக்கவுரை :

1939. குழி மதுக் குவளை அம் கண்ணி வார் குழல்
பிழி மதுக் கோதையார் பேண இன் அமுது
அழி மதக் களிறு அனான் அயின்ற பின்னரே
கழி மலர் விழித்த கண் கமலம் பட்டவே

விளக்கவுரை :

1940. எரி மணி இமைத்தன எழுந்த தீம் புகை
புரி நரம்பு இரங்கின புகன்ற தீங் குழல்
திரு மணி முழவமும் செம் பொன் பாண்டிலும்
அரு மணியின் குரல் அரவம் செய்தவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books