சீவக சிந்தாமணி 1931 - 1935 of 3145 பாடல்கள்
1931. கார் தோன்றவே மலரும் முல்லை கமலம் வெய்யோன்
தேர் தோன்றவே மலரும் செம்மல் நின் மாமன் மற்று உன்
சீர் தோன்றவே மலரும் சென்று அவன் சொல்லி னோடே
பார் தோன்ற நின்ற பகையைச் செறற்பாலை என்றாள்
விளக்கவுரை :
1932. நன்று அப் பொருளே வலித்தேன் மற்று அடிகள் நாளைச்
சென்று அப் பதியுள் எமர்க்கே எனது உண்மை காட்டி
அன்றைப் பகலே அடியேன் வந்து அடைவல் நீமே
வென்றிக் களிற்றான் உழைச் செல்வது வேண்டும் என்றான்
விளக்கவுரை :
[ads-post]
1933. வேல் தைவந்து அன்ன நுதி வெம் பரல் கானம் உன்னி
நூற்று ஐவரோடு நடந்தாள் நுதி வல் வில் மைந்தன்
காற்றின் பரிக்கும் கலிமான் மிசைக் காவல் ஓம்பி
ஆற்றற்கு அமைந்த படையோடு அதர் முன்னினானே
விளக்கவுரை :
1934. மன்றற்கு இடன் ஆம் மணிமால் வரை மார்பன் வான் கண்
நின்று எத்திசையும் மருவிப் புனல் நீத்தம் ஓவாக்
குன்றும் குளிர் நீர்த் தடம் சூழ்ந்தன கோல யாறும்
சென்று அப் பழனப் படப்பைப் புனல் நாடு சேர்ந்தான்
விளக்கவுரை :
1935. காவின் மேல் கடிமலர் தெகிழ்ந்த நாற்றமும்
வாவியுள் இனமலர் உயிர்த்த வாசமும்
பூ விரி கோதையர் புனைந்த சாந்தமும்
ஏவலாற்கு எதிர் எதிர் விருந்து செய்தவே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1931 - 1935 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books