சீவக சிந்தாமணி 1926 - 1930 of 3145 பாடல்கள்
1926. கெலுழனோ நந்தன் என்னாக் கிளர் ஒளி வனப்பினானைக்
கலுழத் தன் கையால் தீண்டிக் காதலின் களித்து நோக்கி
வலி கெழு வயிரத் தூண் போல் திரண்டு நீண்டு அமைந்த திண் தோள்
கலி கெழு நிலத்தைக் காவாது ஒழியுமோ காளைக்கு என்றாள்
விளக்கவுரை :
1927. இடத்தொடு பொழுது நாடி எவ்வினைக் கண்ணும் அஞ்சார்
மடப்படல் இன்றிச் சூழும் மதி வல்லார்க்கு அரியது உண்டோ
கடத்து இடைக் காக்கை ஒன்றே ஆயிரம் கோடி கூகை
இடத்து இடை அழுங்கச் சென்று ஆங்கு இன் உயிர் செகுத்தது அன்றே
விளக்கவுரை :
[ads-post]
1928. இழை பொறை ஆற்ற கில்லாது இட்டிடை தளர நின்ற
குழை நிற முகத்தினார் போல் குறித்ததே துணிந்து செய்யார்
முழை உறை சிங்கம் பொங்கி முழங்கி மேல் பாய்ந்து மை தோய்
வழை உறை வனத்து வன்கண் நரி வலைப்பட்டது அன்றே
விளக்கவுரை :
1929. ஊழி வாய்த் தீயோடு ஒப்பான் பதுமுகன் உரைக்கும் ஒன்னார்
ஆழிவாய்த் துஞ்ச மற்று எம் ஆற்றலான் நெருங்கி வென்று
மாழை நீள் நிதியம் துஞ்சும் மாநிலக் கிழமை எய்தும்
பாழியால் பிறரை வேண்டேம் பணிப்பதே பாணி என்றான்
விளக்கவுரை :
1930. பொரு அருங் குரைய மைந்தர் பொம் என உரறி மற்று இத்
திரு இருந்து அகன்ற மார்பன் சேவடி சேர்ந்த யாங்கள்
எரி இருந்து அயரும் நீர்மை இரும் கதிர் ஏற்ற தெவ்வர்
வரு பனி இருளும் ஆக மதிக்க எம் அடிகள் என்றார்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1926 - 1930 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books