சீவக சிந்தாமணி 1921 - 1925 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1921 - 1925 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1921. ஒற்றர் தங்களை ஒற்றரின் ஆய்தலும்
கற்ற மாந்தரைக் கண் எனக் கோடலும்
சுற்றம் சூழ்ந்து பெருக்கலும் சூது அரோ
கொற்றம் கொள் குறிக் கொற்றவற்கு என்பவே

விளக்கவுரை :

1922. வென்றி ஆக்கலும் மேதகவு ஆக்கலும்
அன்றியும் கல்வி யோடு அழகு ஆக்கலும்
குன்றி னார்களைக் குன்று என ஆக்கலும்
பொன் துஞ்சு ஆகத்தினாய் பொருள் செய்யுமே

விளக்கவுரை :

[ads-post]

1923. பொன்னின் ஆகும் பொருபடை அப்படை
தன்னின் ஆகும் தரணி தரணியில்
பின்னை ஆகும் பெரும் பொருள் அப் பொருள்
துன்னும் காலைத் துன்னாதன இல்லையே

விளக்கவுரை :

1924. நிலத்தின் நீங்கி நிதியினும் தேய்ந்து நம்
குலத்தில் குன்றிய கொள் கையம் அல்லதூஉம்
கலைக் கணாளரும் இங்கு இல்லை காளை நீ
வலித்தது என் என வள்ளலும் கூறுவான்

விளக்கவுரை :

1925. எரியொடு நிகர்க்கும் ஆற்றல் இடிக் குரல் சிங்கம் ஆங்கு ஓர்
நரியொடு பொருவது என்றால் சூழ்ச்சி நல் துணையோடு என் ஆம்
பரிவொடு கவல வேண்டா பாம்பு அவன் கலுழன் ஆகும்
சொரி மதுச் சுரும்பு உண் கண்ணிச் சூழ் கழல் நந்தன் என்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books