சீவக சிந்தாமணி 1916 - 1920 of 3145 பாடல்கள்
1916. எனக்கு உயிர்ச் சிறுவன் ஆவான் நந்தனே ஐயன் அல்லை
வனப்புடைக் குமரன் இங்கே வருக என மருங்கு சேர்த்திப்
புனக் கொடி மாலையோடு பூங் குழல் திருத்திப் போற்றார்
இனத்து இடை ஏறு அனானுக்கு இன் அளி விருந்து செய்தாள்
விளக்கவுரை :
1917. சிறகரால் பார்ப்புப் புல்லித் திரு மயில் இருந்ததே போல்
இறைவி தன் சிறுவர் தம்மை இரு கையினாலும் புல்லி
முறை முறை குமரர்க்கு எல்லாம் மொழி அமை முகமன் கூறி
அறு சுவை அமிர்தம் ஊட்டி அறுபகல் கழிந்த பின் நாள்
விளக்கவுரை :
[ads-post]
1918. மரவம் நாகம் மணம் கமழ் சண்பகம்
குரவம் கோங்கம் குடம் புரை காய் வழை
விரவு பூம் பொழில் வேறு இருந்து ஆய் பொருள்
உருவ மாதர் உரைக்கும் இது என்பவே
விளக்கவுரை :
1919. நலிவு இல் குன்றொடு காடு உறை நன்பொருள்
புலி அனார் மகள் கோடலும் பூமி மேல்
வலியின் மிக்கவர் தம் மகள் கோடலும்
நிலை கொள் மன்னர் வழக்கு என நேர்பவே
விளக்கவுரை :
1920. நீதியால் அறுத்து அந்நிதி ஈட்டுதல்
ஆதி ஆய அரும் பகை நாட்டுதல்
மோதி முள்ளொடு முள்பகை கண்டிடல்
பேது செய்து பிளந்திடல் பெட்டதே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1916 - 1920 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books