சீவக சிந்தாமணி 1911 - 1915 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1911 - 1915 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1911. திருவடி தொழுது வீழ்ந்த சிறுவனைக் கண்ட போழ்தே
வரு பனி சுமந்த வாள்கண் வனமுலை பொழிந்த தீம் பால்
முருகு உடை மார்பில் பாய்ந்து முழு மெயும் நனைப்ப மாதர்
வருக என் களிறு என்று ஏத்தி வாங்குபு தழுவிக் கொண்டாள்

விளக்கவுரை :

1912. காளையாம் பருவம் ஓராள் காதல் மீக் கூர்தலாலே
வாளையாம் நெடிய கண்ணாள் மகனை மார்பு ஒடுங்கப் புல்லித்
தாள் ஐயா முன்பு செய்த தவத்தது விளைவு இலாதேன்
தோள் அயாத் தீர்ந்தது என்றாள் தொழுதகு தெய்வம் அன்னாள்

விளக்கவுரை :


[ads-post]

1913. வாள் திறல் குருசில் தன்னை வாள் அமர் அகத்துள் நீத்துக்
காட்டகத்து உம்மை நீத்த கயத்தியேற் காண வந்தீர்
சேட்டு இளம் பருதி மார்பின் சீவக சாமியீரே
ஊட்டு அரக்கு உண்ட செந் தாமரை அடி நோவ என்றாள்

விளக்கவுரை :

1914. கெடல் அருங் குரைய கொற்றம் கெடப் பிறந்ததுவும் அன்றி
நடலையுள் அடிகள் வைக நட்பு உடையவர்கள் நைய
இடை மகன் கொன்ற இன்னா மரத்தினேன் தந்த துன்பக்
கடல் அகத்து அழுந்த வேண்டா களைக இக் கவலை என்றான்

விளக்கவுரை :

1915. யான் அலன் ஒளவை ஆவாள் சுநந்தையே ஐயற்கு என்றும்
கோன் அலன் தந்தை கந்துக் கடன் எனக் குணத்தின் மிக்க
பால் நிலத்து உறையும் தீம் தேன் அனையவாய் அமிர்தம் ஊற
மான் நலம் கொண்ட நோக்கி மகன் மனம் மகிழச் சொன்னாள்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books