சீவக சிந்தாமணி 1906 - 1910 of 3145 பாடல்கள்
1906. பூத்து அகில் தவழும் போர்வை பூசு சாந்து ஆற்றிப் பொன் நூல்
கோத்து நீர் பிலிற்றும் காந்தம் குங்கும வைரப் பொன் கோய்
சாத்துறி பவழக் கன்னல் சந்தன ஆல வட்டம்
நீத்தவர் இடத்து நாற்றி நிழல் மணி உலகம் செய்தார்
விளக்கவுரை :
1907. நித்தில முலையினார் தம் நெடுங் கணால் நோக்கப் பெற்றும்
கைத் தலம் தீண்டப் பெற்றும் கனிந்தன மலர்ந்த காண்க
வைத்து அலர் கொய்யத் தாழ்ந்த மரம் உயிர் இல்லை என்பார்
பித்து அலர் ஆயின் பேய்கள் என்றலால் பேசலாமோ
விளக்கவுரை :
[ads-post]
1908. பொறி மயில் இழியும் பொன் தார் முருகனின் பொலிந்து மாவின்
நெறிமையின் இழிந்து மைந்தன் மணிக்கை மத்திகையை நீக்கி
வெறுமையின் அவரைப் போக்கி வெள்ளிடைப் படாத நீரால்
அறி மயில் அகவும் கோயில் அடிகளைச் செவ்வி என்றான்
விளக்கவுரை :
1909. எல் இருள் கனவில் கண்டேன் கண் இடன் ஆடும் இன்னே
பல்லியும் பட்ட பாங்கர் வரும் கொலோ நம்பி என்று
சொல்லினள் தேவி நிற்பப் பதுமுகன் தொழுது சேர்ந்து
நல் அடி பணிந்து நம்பி வந்தனன் அடிகள் என்றான்
விளக்கவுரை :
1910. எங்ஙணான் ஐயன் என்றாட்கு அடியன் யான் அடிகள் என்னாப்
பொங்கி வில் உமிழ்ந்து மின்னும் புனை மணிக் கடகம் ஆர்ந்த
தங்கு ஒளித் தடக்கை கூப்பித் தொழுது அடி தழுவி வீழ்ந்தான்
அங்கு இரண்டு அற்பு முன்னீர் அலை கடல் கலந்தது ஒத்தார்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1906 - 1910 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books