சீவக சிந்தாமணி 1901 - 1905 of 3145 பாடல்கள்
1901. சாரல் அம் திமிசிடைச் சந்தனத் தழை வயின்
நீர தீம் பூ மரம் நிரந்த தக்கோலமும்
ஏர் இலவங்கமும் மின் கருப்பூரமும்
ஒரு நாவி கலந்து ஓசனை கமழுமே
விளக்கவுரை :
1902. மைந்தரைப் பார்ப்பன மா மகள் மாக் குழாம்
சந்தனம் மேய்வன தவழ் மதக் களிற்று இனம்
அந்தழைக் காடு எலாம் திளைப்ப ஆமான் இனம்
சிந்த வால் வெடிப்பன சிங்கம் எங்கும் உள
விளக்கவுரை :
[ads-post]
1903. வருக்கையின் கனிதொறும் வானரம் பாய்ந்து உராய்ப்
பொருப்பு எலாம் பொன் கிடந்து ஒழுகி மேல் திருவில் வீழ்ந்து
ஒருக்கு உலாய் நிலமிசை மிளிர்வ ஒத்து ஒளிர் மணி
திருக் கிளர் ஒளி குலாய் வானகம் செகுக்குமே
விளக்கவுரை :
1904. வீழ் பனிப் பாறைகள் நெறி எலாம் வெவ் வெயில்
போழ்தலின் வெண்ணெய் போல் பொழிந்து மட்டு ஒழுகுவ
தாழ் முகில் சூழ் பொழில் சந்தனக் காற்று அசைந்து
ஆழ் துயர் செய்யும் அவ் அருவரைச் சாரலே
விளக்கவுரை :
1905. கூகையும் கோட்டமும் குங்குமமும் பரந்து
ஏகல் ஆகா நிலத்து அல்கி விட்டு எழுந்து போய்த்
தோகையும் அன்னமும் தொக்கு உடன் ஆர்ப்பது ஓர்
நாக நன் காவினுள் நயந்து விட்டார்களே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1901 - 1905 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books