சீவக சிந்தாமணி 1896 - 1900 of 3145 பாடல்கள்
1896. பூந் துகில் மாலை சாந்தம் புனை கலம் பஞ்ச வாசம்
ஆய்ந்து அளந்து இயற்றப்பட்ட அடிசில் நீர் இன்ன எல்லாம்
மாந்தரின் மடங்கல் ஆற்றல் பதுமுகன் காக்க என்று ஆங்கு
ஏந்து பூண் மார்பன் ஏவ இன்னணம் இயற்றினானே
விளக்கவுரை :
1897. சிறு கண் யானையின் இனம் சேர்ந்து சேவகம் கொளத்
துறுகல் என்று உணர்கலாத் துள்ளி மந்தி மக
நறிய சந்தின் துணி நாற வெந்தனகள் கொண்டு
எறிய எள்கி மயிர்க் கவரிமா இரியுமே
விளக்கவுரை :
[ads-post]
1898. புகழ் வரைச் சென்னி மேல் பூசையின் பெரியன
பவழமே அனையன பல் மயிரப் பேர் எலி
அகழும் இங்குலிகம் அஞ்சன வரைச் சொரிவன
கவழ யானையின் நுதல் தவழும் கச்சு ஒத்தவே
விளக்கவுரை :
1899. அண்ணல் அம் குன்றின் மேல் வருடை பாய்ந்து உழக்கலின்
ஒண் மணி பல உடைந்து ஒருங்கு அவை தூளியாய்
விண் உளு உண்டு என வீழும் மா நிலமிசைக்
கண் அகன் மரம் எலாம் கற்பகம் ஒத்தவே
விளக்கவுரை :
1900. மானிடம் பழுத்தன கிலுத்தம் மற்று அவற்று அயல்
பால் முரண் பயம்பிடைப் பனை மடிந்த அனையன
கானிடைப் பாந்தள் கண் படுப்பன துயில் எழ
ஊன் உடைப் பொன் முழை யாளி நின்று உலம்புமே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1896 - 1900 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books