சீவக சிந்தாமணி 1891 - 1895 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1891 - 1895 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1891. தொழுத தம் கையின் உள்ளும் துறு முடி அகத்தும் சோர
அழுத கண்ணீரின் உள்ளும் அணிகலத்து அகத்தும் மாய்ந்து
பழுது கண் அரிந்து கொல்லும் படையுடன் ஒடுங்கும் பற்றாது
ஒழிக யார் கண்ணும் தேற்றம் தெளிகுற்றார் விளிகுற்றாரே

விளக்கவுரை :

1892. தோய் தகை மகளிர்த் தோயின் மெய் அணி நீக்கித் தூய் நீர்
ஆய் முது மகளிர் தம்மால் அரில்தபத் திமிரி ஆட்டி
வேய் நிறத் தோளினார்க்கு வெண் துகில் மாலை சாந்தம்
தான் நல கலங்கள் சேர்த்தித் தடமுலை தோய்க என்றான்

விளக்கவுரை :

[ads-post]

1893. வண்ணப் பூமாலை சாந்தம் வால் அணி கலன்கள் ஆடை
கண் முகத்து உறுத்தித் தூய்மை கண்டலால் கொள்ள வேண்டா
அண்ணல் அம் புள்ளோடு எல்லா ஆயிரம் பேடைச் சேவல்
உண்ணு நீர் அமிழ்தம் காக்க ஊகமோடு ஆய்க என்றான்

விளக்கவுரை :

1894. அஞ்சனக் கோலின் ஆற்றா நாகம் ஓர் அருவிக் குன்றின்
குஞ்சரம் புலம்பி வீழக் கூர் நுதி எயிற்றில் கொல்லும்
பஞ்சியின் மெல்லிதேனும் பகை சிறிது என்ன வேண்டா
அஞ்சித் தற்காத்தல் வேண்டும் அரும் பொருளாக என்றான்

விளக்கவுரை :

1895. பொருந்தலால் பல்லி போன்றும் போற்றலால் தாயர் ஒத்தும்
அருந்தவர் போன்று காத்தும் அடங்கலால் ஆமை போன்றும்
திருந்து வேல் தெவ்வர் போலத் தீது அற எறிந்தும் இன்ப
மருந்தினால் மனைவி ஒத்தும் மதலையைக் காமின் என்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books