சீவக சிந்தாமணி 1886 - 1890 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1886 - 1890 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1886. அண்ணல் குருகுலத்தான் என்றால் யான் முன் கருதியது என்
எண்ணம் வெளிப்பட்டான் கரந்த மைந்தன் எரி செம் பொன்
வண்ண வரை மார்பம் முயங்கி நுண் நூல் மதியாரோடு
எண்ணி விய நெறியால் விடுத்தான் கோயில் புக்கானே

விளக்கவுரை :

1887. விள்ளா வியன் நெடுந் தேர் வேந்தன் காதல் மட மகளே
கள் ஆவி கொப்புளிக்கும் கமழ் பூங் கோதாய் என் மனத்தின்
உள் ஆவி உள்ளாய் நீ ஒழிந்தாய் அல்லை எனக் கையில்
புள் ஆவிச் செங் கழுநீர்க் குவளை செய்தாள் புனை பூணாள்

விளக்கவுரை :

[ads-post]

1888. வார் முயங்கு மெல் முலைய வளை வேய்த் தோளாள் மனம் மகிழ
நீர் முயங்கு கண் குளிர்ப்பப் புல்லி நீள் தோள் அவன் நீங்கித்
தேர் முயங்கு தானையான் சிறுவர் சேடார் அகல் மார்பம்
தார் முயங்கிக் கூந்தல் மா இவர்ந்தான் சங்கம் முரன்றவே

விளக்கவுரை :

விமலையார் இலம்பகம்

1889. முருகு கொப்புளிக்கும் கண்ணி முறி மிடை படலை மாலைக்
குருதி கொப்புளிக்கும் வேலான் கூந்தல் மா இவர்ந்து செல்ல
உருவ வெம் சிலையினாற்குத் தம்பி இஃது உரைக்கும் ஒண் பொன்
பருகு பைங் கழலினாருள் பதுமுகன் கேட்க என்றே

விளக்கவுரை :

1890. விழு மணி மாசு மூழ்கிக் கிடந்தது இவ் உலகம் விற்பக்
கழுவினீர் பொதிந்து சிக்கக் கதிர் ஒளி மறையக் காப்பின்
தழுவினீர் உலகம் எல்லாம் தாமரை உறையும் செய்யாள்
வழுவினார் தம்மைப் புல்லாள் வாழ்க நும் கண்ணி மாதோ

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books