சீவக சிந்தாமணி 1881 - 1885 of 3145 பாடல்கள்
1881. இலவம் பூ அரக்கு உண்டு அன்ன பஞ்சி மெல் அடியினாள் தன்
புலவிச் சொல் பொறித்த ஓலை திரு முடி துளக்கி நோக்கித்
தலை வைத்த காப்பு விஞ்சை கொண்ட பின் தாமம் சூழ்ந்து
கொலை வைத்த குருதி வேலான் தோழரைக் குறுகினானே
விளக்கவுரை :
1882. எம் கோ மற்று என் திறம் நீர் கேட்டது என்றாற்கு எரி மணிப் பூண்
செங்கோல் மணி நெடுந் தேர்ச் செல்வன் காதல் பெருந் தேவி
தங்காத் தவ உருவம் தாங்கித் தண்டாரணியத்துள்
அங்காத்து இருந்தாளைத் தலைப்பட்டு ஐய அறிந்தோமே
விளக்கவுரை :
[ads-post]
1883. என்னே மற்று என்னே நீர் மொழிந்தது என்னே என விரும்பி
முன்னே மொழிந்தால் போல் முறை நின்று எல்லாம் உடன் மொழிய
மன் ஆரம் சிந்துவ போல் மலர்ந்த செந்தாமரைக் கண்ணீர்
பொன் ஆர மார்பின் மேல் பொழியப் புன்கண் உற்றானே
விளக்கவுரை :
1884. அஃதே அடிகளும் உளரோ என்றாற்கு அருளுமாறு
இஃதா இருந்தவாறு என்றார்க்கு என்னைப் பெற வல்லார்க்கு
எய்தா இடர் உளவே எங்கு எங்கு என்று அத் திசை நோக்கி
வெய்தா அடி தொழுது வேந்தன் கோயிற்கு எழுந்தானே
விளக்கவுரை :
1885. இலை விரவு பூம் பைந்தார் வேந்தன் ஏந்தல் குலம் கேட்பான்
மலை விரவு நீள் மார்பின் மைந்தன் தோழர் முகம் நோக்கிக்
கொலை விரவு கூர் நுதி வேல் குமரன் என்னக் குருகுலத்தான்
கலை விரவு தீம் சொல்லார் காமன் என்றார் கமழ் தாரார்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1881 - 1885 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books