சீவக சிந்தாமணி 1876 - 1880 of 3145 பாடல்கள்
1876. பட்ட பழி வெள்ளி மலை மேல் பரத்தல் அஞ்சித்
தொட்டு விடுத்தேன் அவனைத் தூது பிற சொல்லிப்
பட்ட பழி காத்துப் புகழே பரப்பின் அல்லால்
விட்டு அலர்ந்த கோதை அவரால் விளைவது உண்டோ
விளக்கவுரை :
1877. அல்லதுவும் எங்கை குணமாலை அவள் ஆற்றாள்
செல்லும் மதி நோக்கிப் பகலே சிறியை என்னும்
பல் கதிரை நோக்கி மதியே பெரியை என்னும்
எல்லி இது காலை இது என்பது அறிகல்லாள்
விளக்கவுரை :
[ads-post]
1878. அரவு வெகுண்ட அன்ன அகல் அல்குல் நிலம் புல்லித்
திருவில் வளைந்தனைய திரு மேகலையின் நீங்கிப்
புருவ மதி முகமும் புகழ் தோளும் புணர் முலையும்
உருவம் அழிந்து அடிச்சி உளள் ஆம் கொல் உணர்கலனே
விளக்கவுரை :
1879. நாளை வரும் நையல் என நன்று என விரும்பி
நாளை எனும் நாள் அணிமைத்தோ பெரிதும் சேய்த்தோ
நாளை உரை என்று கிளியோடு நகச் சொல்லும்
நாளினும் இந் நங்கை துயர் நாளினும் அற்று இதுவே
விளக்கவுரை :
1880. நோக்கவே தளிர்த்து நோக்காது இமைப்பினும் நுணுகும் நல்லார்
பூக் கமழ் அமளிச் சேக்கும் மது மணவாளனார் தாம்
நீப்பு இலார் நெஞ்சின் உள்ளார் ஆதலான் இனைத்தல் செய்யேன்
போக்குவல் பொழுதும் தாம் தம் பொன்னடி போற்றி என்றாள்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1876 - 1880 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books