சீவக சிந்தாமணி 1871 - 1875 of 3145 பாடல்கள்
1871. துறக்கம் இதுவே எனும் தொல் நகர் மன்னன் மங்கை
தொறுக் கொண்ட கள்வர் இவரோ எனச் சொல்லி நக்கு ஆங்கு
ஒறுக்கப் படுவார் இவர் என்று அங்கு அசதி யாடி
வெறுக்கைக் கிழவன் மகள் என்ன விருந்து செய்தாள்
விளக்கவுரை :
1872. அருந் தீத் தொழிலே புரிந்தான் மறை ஆய எல்லாம்
விருந்தா விரிப்பான் அவன் சீவகசாமி வேறா
இருந்தாற்கு ஓர் ஓலை கொடுத்தான் எரி குண்டலத்தால்
பொருந்தார் பொறியைப் புறம் நீக்குபு நோக்கு கின்றான்
விளக்கவுரை :
[ads-post]
1873. மற்று அடிகள் கண்டு அருளிச் செய்க மலரடிக் கீழ்ச்
சிற்றடிச்சி தத்தை அடி வீழ்ச்சி திருவடிகட்கு
உற்ற அடிசில் மஞ்சனத்தை உள் உறுத்த காப்பும்
பொற்புடைய ஆக எனப் போற்றி அடி வீழ்ந்தேன்
விளக்கவுரை :
1874. வயிர மணிக் கலன் கமழும் கற்பக நல் மாலை
உயிரை மதம் செய்யும் மதுத் தண்டொடு உடையாடை
செயிரில் நறுஞ் சாந்து சிலை அம்பு மணி அயில் வாள்
மயிர் எலியின் போர்வையொடு எம் மன்னன் விடுத்தானே
விளக்கவுரை :
1875. வந்தவனை யாரும் அறியாமல் மறையாகத்
தந்து தரன் கேட்ப இது சாமி வலித்தானா
ஐந்து மதி எல்லையினை ஆண்டு உடையன் ஆகி
அம் தில் அகன்றான் தமரொடு ஆங்கண் எனச் சொன்னேன்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1871 - 1875 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books