சீவக சிந்தாமணி 1866 - 1870 of 3145 பாடல்கள்
1866. வான் நக்கி நின்று நுடங்கும் கொடி மாட மூதூர்ப்
பால் நக்க தீம் சொல் பவளம் புரை பாவை அன்ன
மான் நக்க நோக்கின் மடவார் தொழ மைந்தர் ஏத்த
யானைக் குழாத்தின் இழிந்தார் அரிமானொடு ஒப்பார்
விளக்கவுரை :
1867. செம் பொன் புளகத்து இள ஞாயிறு செற்ற கோயில்
வம்பில் துளும்பு முலை வாள் நெடுங் கண் மடவார்
நம்பப் புகுந்து நரதேவன் அருளின் எய்திப்
பைம் பொன் புளகக் களிற்றான் அடி தாம் பணிந்தார்
விளக்கவுரை :
[ads-post]
1868. வல்லான் புனைந்த வயிரக் குழை வார்ந்து வான் பொன்
பல் பூண் எருத்தில் பரந்த அம் சுடர் கால மன்னன்
மல்லார் திரள் தோள் மருமான் முகம் நோக்க மைந்தர்
எல்லாம் அடிகள் எனக்கு இன் உயிர்த் தோழர் என்றான்
விளக்கவுரை :
1869. வார் பொன் முடிமேல் வயிரம் உழச் சேந்த செல்வத்து
ஆர் பொன் அடி சூழ் மணி அம் கழல் ஆனை வேந்தன்
கார் மின் நுடங்கும் இடை மங்கையைக் காண்க சென்று என்று
ஏர் மின்னு தாரான் அருளத் தொழுது ஏகினாரே
விளக்கவுரை :
1870. தழு முற்றும் வாராத் திரள் தாமங்கள் தாழ்ந்த கோயில்
முழு முற்றும் தானே விளக்காய் மணிக் கொம்பின் நின்றாள்
எழு முற்றும் தோளார் தொழுதார் இன்னர் என்று நோக்கக்
கழுமிற்றுக் காதல் கதிர் வெள்வளைத் தோளினாட்கே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1866 - 1870 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books