சீவக சிந்தாமணி 1861 - 1865 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1861 - 1865 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1861. மன்னவன் நிரை கொண்டாரை வளநகர்த் தந்து மன்னன்
பொன் அவிர் கழலில் தங்கள் புனை முடி இடுவியேனேல்
இன்னிசை உலகம் தன்னுள் என் பெயர் சேறல் இன்றாய்க்
கன்னிய மகளிர் நெஞ்சில் காமம் போல் கரக்க என்றான்

விளக்கவுரை :

1862. பார் மலி பரவைத் தானைப் பரப்பிடைப் பறப்பதே போல்
நீர் மலி கடாத்த கொண்மூ நெற்றிமேல் மின்னின் நொய்தாத்
தார் மலி மார்பன் திண் தேர் தோன்றலும் தறு கண் மைந்தன்
சீர் மலி பகழி ஏந்திப் பதுமுகன் சிலை தொட்டானே

விளக்கவுரை :

[ads-post]

1863. குடை நிழல் கொற்ற வேந்தன் ஒரு மகன் காணக் குன்றா
அடி நிழல் உறைய வந்தேம் அடியம் யாம் என்ன எய்த
விடுகணை சென்று தேர் மேல் பின் முனா வீழ்த லோடும்
தொடு கழல் குருசில் நோக்கித் தூத்துகில் வீசினானே

விளக்கவுரை :

1864. ஏந்தலைத் தோழர் எல்லாம் இணை அடி தொழுது வீழச்
சேந்தன கண்ணினாலும் திண் எழில் தோளினாலும்
வாய்ந்த இன் சொல்லினாலும் மாலை தாழ் முடியினாலும்
ஆய்ந்தவன் சிறப்புச் செய்தான் அவல நோய் அவரும் தீர்ந்தார்

விளக்கவுரை :

1865. கழல் அவாய்க் கிடந்த நோன் தாள் காளை தன் காதலாரை
நிழல் அவாய் இறைஞ்சி நீங்கா நெடுங் களிற்று எருத்தம் மேல் ஏற்றி
அழல் அவாய்க் கிடந்த வைவேல் அரச இளங் குமரர் சூழக்
குழல் அவாய்க் கிடந்த கோதை தாதையூர் கொண்டு புக்கான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books