சீவக சிந்தாமணி 1856 - 1860 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1856 - 1860 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1856. எம் குலம் அடிகள் கேட்க என்றலும் எழுந்த ஓர் பூசல்
பொங்கு உளைப் புரவி வெள்ளம் போக்கு அற வளைத்து முற்றி
இங்கு உள நிரையை எல்லாம் கவர்ந்தது என்று இட்ட போழ்தே
திங்கள் வெண் குடையினான் தன் திருச் செவிக்கு இசைத்தது அன்றே

விளக்கவுரை :

1857. எரித் திறல் வென்றி வேந்தற்கு இற்றென இசைப்பச் சீறி
மருப்புறக் கந்து பாய்ந்து முழங்கும் மால் களிறு போலத்
திருக் கிளர் மணி செய் பொன் தூண் தீப்படப் புடைத்துச் செங் கண்
உருத்து எரி தவழ நோக்கி உடல் சினம் கடவச் சொன்னான்

விளக்கவுரை :

[ads-post]

1858. நால் கடல் பரப்பும் வந்து நல் நகர்க் கண் உற்று என்ன
வேல் கடல் தானை பாய் மா விளங்கு ஒளி இவுளித் திண் தேர்
கூற்று என முழங்கும் ஓடைக் குஞ்சரக் குழாத்தோடு ஏகிப்
பால் கடல் பரப்பின் வல்லே படுநிரை பெயர்க்க என்றான்

விளக்கவுரை :

1859. கண் அகன் கடல் அம் கோடும் பறைகளும் முழங்கி விம்ம
விண் அகத்து இயங்கும் மேகக் குழாம் என நிரைத்த வேழம்
திண் நுகப் புரவித் திண் தேர் விரைந்தன நிரந்த பாய்மா
மண்ணகம் மலிரக் காலாள் கடல் கிளர்ந்து எழுந்தது அன்றே

விளக்கவுரை :

1860. பால் நிறக் கவரி நெற்றிப் பசுங்கிளி நிறத்த பாய்மாத்
தான் உறப் பண்ணித் திண்தேர்த் தம்பி கோல் கொள்ள ஏறிக்
கூன் நிறக் குழவித் திங்கள் குளிர் கதிர் ஆர மார்பில்
தேன் நிறம் கொண்ட கண்ணிச் சீவக குமரன் சொன்னான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books