சீவக சிந்தாமணி 1851 - 1855 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1851 - 1855 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1851. அளைச் செறி இரும் புலி அனைய ஆடவர்
வளைத்தனர் மணி நிரை வன் கண் ஆயரும்
விளைத்தனர் வெருவரத் தக்க வெம் சொலால்
உளைத்தனர் பூசல் விட்டு உணர்த்த ஓடினார்

விளக்கவுரை :

1852. தேர்த் தொகைத் தானை மன்னன் சீவகற்கு இளைய நம்பி
வார்த் தொகை முழவம் விம்ம மல் உறழ் தோளினானை
நீர்த் தொகைக் கழனி நாடு நெடு நகர்ப் பெயரும் நுங்கள்
சீர்த் தொகைக் குலனும் எல்லாம் தெரிந்து எமக்கு உரைமோ என்றான்

விளக்கவுரை :

[ads-post]

1853. திருக்குறிப்பு அன்னது ஆயின் செப்புவல் அடிகள் செம் பொன்
அரித்து அசும்பு ஒழுகு குன்றத்து அருவியின் வெரீஇய மஞ்ஞை
பரித்தவை பழன நாரைப் பார்ப்பொடு மருதில் சேக்கும்
உரைத்தகு நாடும் ஊரும் குலத்துடன் உணர என்றான்

விளக்கவுரை :

1854. பொரு கயல் உகளிப் பாயப் பூஞ் சிறைக் குமரி அன்னம்
குருகினோடு இரியச் செந் நெல் கொழுங் கதிர் குவளை எற்ற
முருகு விண்டு இரியத் தீம் தேன் முழங்கு நீர்க் கழனி நல் நாடு
எரி உமிழ்ந்து இலங்கும் வேலோய் ஏமமாங்கதம் அது என்றான்

விளக்கவுரை :

1855. பூந் துகில் கொடுத்த தீம் தேன் அகில் புகை பொன் அனார்தம்
கூந்தலில் குளித்த வண்டு கொப்புளித்து இட்ட வாசம்
மாந்தர் மேல் தவழ்ந்து மாடம் இருள் படப் புதையும் செல்வத்து
ஏந்து பொன் இஞ்சி மூதூர் இராசமாபுரம் அது என்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books