சீவக சிந்தாமணி 1846 - 1850 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1846 - 1850 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1846. வேல் நிரை வாள் மதில் பிளந்து வெம் சமத்து இடைத்
தேன் நிரை களிற்றின் மேல் திண் குளம்பு அழுத்துவ
ஆன் நிரை வளைப்பது ஓர் பொருள் எனச் சிரித்து உடன்
மா நிரை பண்ணினார் வடித்த நூல் கேள்வியார்

விளக்கவுரை :

1847. விடை உடை இன நிரை விழுங்கல் மேயினார்
துடியொடு சிறுபறை துவைத்த வால் வளை
முடி உலகு உற நிமிர்ந்து ஆர்த்த மொய் கழல்
அடுபடை இளையரும் அரணம் வீசினார்

விளக்கவுரை :

[ads-post]

1848. காந்தள் அம் கடி மலர்க் கண்ணி நெற்றியர்
ஆய்ந்து அளந்து இயற்றிய அத்து உண் ஆடையர்
வேய்ந்துணி அலமரும் புறத்தர் வெம் சுடர்
ஏந்து எழில் நவியமும் ஏந்து தோளினார்

விளக்கவுரை :

1849. கோன் உடை இன நிரை காக்கும் கோவலர்
தேனொடு கடிச் சுரும்பு அரற்றும் தே மலர்க்
கான் இடை இன நிரை காவல் போற்றுமின்
ஆன் இடை அழித்த புள் என்று கூறினார்

விளக்கவுரை :

1850. விடு பொறி அரவு என விளங்கு வெம் சிலை
அடு கணை சிதறினார் ஆர்த்த வால் வளை
கடுகின கால் இயல் இவுளி காண்டலும்
முடுகுபு கோவலர் முந்து கால் பெய்தார்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books