சீவக சிந்தாமணி 1841 - 1845 of 3145 பாடல்கள்
1841. வள் உகிர் நுதியினால் வரி நுதல் உறுத்தலும்
உள் உணர் குஞ்சரம் ஒய் என நிற்றலும்
எள் அரும் இரு மணி கிணின் என இசைத்தன
வெள்ள நீர்ப் பெருஞ் சனம் வியந்து கை விதிர்த்ததே
விளக்கவுரை :
1842. என் மனம் நின் மனம் என்று இரண்டு இல்லையால்
தன் மனத்து உள பொருள் தான் தனக்கு உரைப்பது ஒத்து
உன் மனம் என் மனம் என்பது ஒத்து இழைத்ததால்
நன் மனக் குஞ்சர நம்பியோடு என்மரும்
விளக்கவுரை :
[ads-post]
1843. தேவனே மகன் அலன் செல்வன் மற்று என்மரும்
பாவையே நோற்றனள் பாரின் மேல் என்மரும்
கோவனும் மக்களும் குளிர்ந்து தோள் நோக்கினார்
ஓ என வையகத்து ஓசை போய் உயர்ந்ததே
விளக்கவுரை :
1844. பிண்டம் உண்ணும் பெருங் களிறு பூட்டி அவண்
வண்டரும் ஓவரும் பாட மா நகர் தொழக்
கொண்ட தன் தம்பியும் தானும் கோயில் புகக்
கண்டனம் கண்ணினே என்று கண்டவர் சொனார்
விளக்கவுரை :
1845. பாத்தில் சீர்ப் பதுமுகன் படிவ ஒற்றாளர் சொற்கு
ஓத்து எனக் கொடுத்தனன் கொழுநிதி உவகையில்
தூத்திரள் சுறா இனம் தொக்க போல் மறவரும்
ஏத்த அருஞ் சிலை கை வாள் இலங்கு வேல் ஏந்தினார்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1841 - 1845 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books