சீவக சிந்தாமணி 1836 - 1840 of 3145 பாடல்கள்
1836. கச்சையும் வீக்கினன் கறங்கு இரு மணி அணிந்து
அச்சுறு கொழுந் தொடர் யாப்பு அழித்து அடி இணை
உச்சியும் புரோசையுள் குளிப்ப உய்த்து உறுவலி
மெச்சி மேல் வேந்தனும் விழைதகத் தோன்றினான்
விளக்கவுரை :
1837. கோல் தொடிப் புரிசையுள் கொற்றவன் நின்று ஐயன்
ஏற்று இயல் காண்டும் நாம் இவண் தருக என்னவே
காற்று எனக் கடல் எனக் கருவரை உரும் எனக்
கூற்று எனக் குஞ்சரம் கொண்டு புக்கான் அரோ
விளக்கவுரை :
[ads-post]
1838. குழவி அம் செல்வன் ஓர் குன்று கொண்டு ஒய் என
அழகிதாப் பறப்பதே போலவும் ஆர் புயல்
மழையை ஊர்ந்து ஓடும் ஓர் வானவன் போலவும்
எழுதல் ஆகா வணம் இருந்தனன் என்பவே
விளக்கவுரை :
1839. வனை கலத் திகிரியும் வாழ் உயிர் மேல் செலும்
கனை கடுங் கதழ் பரிக் கால சக்கரமும் போல்
வினை தகு வட்டமும் வீதியும் பத்தியும்
இனையவை ஏமுற இமைப்பினின் இயற்றினான்
விளக்கவுரை :
1840. ஒருவனே களிறும் ஒன்று ஓர் நூறு ஆயிரம்
திரிவவே போன்றன திசை எலாம் குஞ்சரக்கு
உரியவன் இவன் அலால் உலகினில் இலன் என
அரிதுணர் வேத்து அவை அமைக மற்று என்றதே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1836 - 1840 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books