சீவக சிந்தாமணி 1831 - 1835 of 3145 பாடல்கள்
1831. கடுமதக் களிப்பினால் கார் என முழங்கலின்
விடுகலார் பாகரும் வெருவரக் கொன்றிடப்
பிடியொடும் கந்து அணைவு இன்றி நீர் உருள் பிளந்து
அடுகளிறு அந்தப் போதிகை பரிந்து அழன்றதே
விளக்கவுரை :
1832. கண் உமிழ் தீயினால் சுட நிறம் கரிந்த போல்
பண் உமிழ் வண்டு உலாய்ப் பரத்தரா நின்ற சீர்
அண்ணல் அம் களிற்றினை அடக்கினான் சீவகன்
வண்ண மேகலையினார் மனம் எனப் படிந்ததே
விளக்கவுரை :
[ads-post]
1833. இறு வரை இவர்வது ஓர் இலங்கு எயிற்று அரி என
உறு வரை மார்பினான் தூசம் கொண்டு ஒய் எனப்
பெறல் அருங் குஞ்சரம் ஏறலின் பெருஞ் சனம்
அறை கடல் திரை ஒலித்து ஆங்கு என ஆர்த்ததே
விளக்கவுரை :
1834. அங் கை அம் தலத்தினால் அப்புது ஆது ஐ எனக்
கொங்கு அலர் கண்ணியான் கொம்மை தான் கொட்டலும்
பொங்கிய உவகையில் பொலிந்து மாக் களிறு அவன்
தங்கிய பயிர்த் தொழில் தடக்கையால் செய்ததே
விளக்கவுரை :
1835. கொட்டை அம் புரோசைதான் இருவடம் கொண்டு உடன்
கட்டினான் கருவலித் தடக் கையால் தோட்டியும்
இட்டனன் இரண்டுடன் இமிழ்க் கொளீஇ இலங்கு பொன்
பட்டமும் பனிவரை மின் எனக் கட்டினான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1831 - 1835 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books