சீவக சிந்தாமணி 1826 - 1830 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1826 - 1830 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1826. சேண் குலாம் சிலையொடு திளைத்த பின் அவர்
வாள் கலாம் வலித்து அமர் தொடங்கின் வல்லையே
மீட்கலாம் விருப்பு உடைத்து எழுக என்று தன்
ஆட்கு எலாம் செப்பினன் அலர்ந்த தாரினான்

விளக்கவுரை :

1827. இருங் கடல் மணிநிரை எய்தி நாம் கொண்டபின்
அருங் கடி அணி நகர் ஐயன் அங்கு இல்லையேல்
பெரும்படை தான் வரின் பின்றி நீங்கின் பழி
தரும் படித்து அன்றியும் சாற்றுவல் கேண்மினோ

விளக்கவுரை :

[ads-post]

1828. மஞ்சு சூழ் விசும்பு இடை மணந்து மின் மிளிர்வ போல்
வஞ்சம் இல் மறவர் வாள் மிளிர்ந்து பாய் குருதியுள்
குஞ்சரம் குளிப்பது ஓர் நீத்தமாம் ஆதலால்
எஞ்சல் இல் கொள்கையீர் எண்ணிச் சூழ்மின்களே

விளக்கவுரை :

1829. என்றனன் புத்திசேன் என்னும் நான் மறையினான்
நன்று அதே பொருள் என நால்வரும் இருந்துழி
ஒன்றி முன் விடுத்தவர் மூவர் ஒற்று ஆட்கள் வந்து
இன்று இதால் பட்டது என்று இயம்பு கின்றார்களே

விளக்கவுரை :

1830. வளைய சுந்தரம் எனும் வாரண மால் வரை
முளை இளந் திங்கள் போல் முத்து உடைக் கோட்டது
கிளை இளம் பிடிகள் ஐந் நூற்று இடைக் கேழ் அரக்கு
அளைய அஞ்சன வரை அனையது அக்களிறு அரோ

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books