சீவக சிந்தாமணி 1821 - 1825 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1821 - 1825 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1821. மதுக் குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக் கலத்து எழுந்த தீம் பால் பொங்கலின் நுரையின் பொங்கிக் கதிர்த்து வெண் மாடம் தோன்றும் செவ்வையில் காதம் நான்கின்
நதிக்கரை வந்து விட்டார் நச்சு எயிற்று அரவோடு ஒப்பார்

விளக்கவுரை :

1822. மான் அயாம் நேக்கியர் மருங்குல் போல்வது ஓர்
கான யாற்று அடைகரைக் கதிர்கண் போழ்கலாத்
தேன் அயாம் பூம்பொழில் திண்ணை வெண்மணல்
தானையாம் நால்வரும் தணப்பின்று எய்தினார்

விளக்கவுரை :

[ads-post]

1823. வார்ந்து தேன் துளித்து மட்டு உயிர்த்து வார் மணல்
ஆர்ந்து போது அருந் தவிசு அடுத்தது ஒத்து மேல்
தூர்ந்து தேன் வண்டொடு துதைந்து உள் புக்கவர்
போந்து போக்கு அரியது அப் பொழிலின் பெற்றியே

விளக்கவுரை :

1824. தாது அணி கொழு நிழல் இருந்து தண்மதுப்
போது அணி அலங்கல் தாழ் பொரு இல் மார்பனை
யாது நாம் அடை திறம் உரைமின் நீர் எனக்
காதலால் பதுமுகன் கண்டு கூறினான்

விளக்கவுரை :

1825. திருக் கிளர் மன்னவன் சேனை மாநகர்
பொருக்கு ஒளி இன நிரை கோடும் கொண்ட பின்
முருக்கு ஒளி மலர் அடி மூரி மொய்ம்பனைச்
செருக் களத்து எதிர்ப்படச் சிதைவது இல்லையே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books