சீவக சிந்தாமணி 1816 - 1820 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1816 - 1820 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1816. பகைவர் உள்ளமும் பாம்பின் படர்ச்சியும்
வகை கொள் மேகலை மங்கையர் நெஞ்சமும்
மிகை செல் மேகத்து மின்னும் செந் நில்லலா
புகை செய் வேலினீர் போற்றுபு சென்மினே

விளக்கவுரை :

1817. வணக்க அருஞ் சிலையினானை ஒரு மதி எல்லை நாளுள்
குணத்தொடு மலிந்த பாதம் குறுக யாம் கொணர்ந்த பின்றைப்
பணித்ததே செய்து பற்றார் பகை முதல் அடர்த்தும் என்றார்
மணிக் கொடி மாசு உண்ட அன்னாள் மற்றதே துணிமின் என்றாள்

விளக்கவுரை :

[ads-post]

1818. பொறி தவ நெருங்க நோற்றுப் புகர் அற நிறைந்த கொள்கைச்
செறி தவ விசயை பாதம் சென்னியின் வணங்கி மீண்டு
வெறி கமழ் சோலை நண்ணி வேண்டிய அடிசில் கை தொட்டு
எறி படை எழுக என்றார் வளை எழுந்து ஆர்த்த அன்றே

விளக்கவுரை :

1819. பைந் துகில் மகளிர் தேன் சோர் பவளவாய் திகழ நாணிச்
சிந்தித்துக் கூந்தல் வாங்கிச் செவ்வணம் துடைப்பதே போல்
இந்திர கோபம் கௌவி இறகு உளர்கின்ற மஞ்ஞை
அந்தரத்து இவர்ந்த பாய் மா அரும் பொன்தார் அரவத் தாலே

விளக்கவுரை :

1820. சாந்தின் மேல் தொடுத்த தீம் தேன் தண் மதிக்கோடு போழப்
போந்து மட்டு அருவி வீழும் பொன் நெடுங் குன்றும் அம் தண்
ஏந்து பூங் காவு சூழ்ந்த இரும்புனல் ஆறும் நீந்தி
மாந்தரே மலிந்த நாடு மடுத்து உடன் சென்றது அன்றே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books