சீவக சிந்தாமணி 1811 - 1815 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1811 - 1815 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1811. கொலைக்களம் குறுகலும் கொண்டு ஓர் தெய்வதம்
நிலைக்களம் இது என நீக்க நீங்கினான்
இலக்கண மடப்பிடி இயைந்து ஓர் போதகம்
மலைக்கணத்து இடை மகிழ்ந்து அனைய மைந்தனே

விளக்கவுரை :

1812. பூ உடைத் தெரியலான் போர்வை நீத்து இனிக்
கோவுடைப் பெருமகன் ஆதல் கொண்டனம்
சேவடி சேர்ந்தனம் தொழுது சென்று என
மாவடு நோக்கி உள் மகிழ்ந்து கூறினாள்

விளக்கவுரை :

[ads-post]

1813. தரணி காவலன் சச்சந்தன் என்பவன்
பரணி நாள் பிறந்தான் பகை யாவையும்
அரண் இலான் என்கண் தங்கிய அன்பினால்
இரணியன் பட்டது எம் இறை எய்தினான்

விளக்கவுரை :

1814. விசயை என்று உலகோடிய வீறு இலேன்
பசையினால் துஞ்சி யான் பட்ட தீது எலாம்
இசைய நம்பிக்கு எடுத்து உரைத்து என் உழை
அசைவின்று ஐயனைத் தம்மின் எனச் சொன்னாள்

விளக்கவுரை :

1815. கோதை வேல் நம்பிக்கு அல்லதை இப் பொருள்
யாதும் கூறன்மின் யாரையும் தேறன்மின்
ஏதம் இன்னன இன்னணம் எய்தலால்
பேதை யாரொடும் பெண்ணொடும் பேசன்மின்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books