சீவக சிந்தாமணி 1806 - 1810 of 3145 பாடல்கள்
1806. கந்தார் களியானைக் காவலனார் கான் முளையை
வந்தார் வாய்த் தீது இன்மை கேட்டு மறைந்திருந்து
நொந்தேன் பலகாலும் நோயோடே வீகின்றேன்
அந்தோ அறனே மற்று ஆற்றேனால் ஆற்றேனால்
விளக்கவுரை :
1807. முன் ஒருகால் என் மகனைக் கண்டேன் என் கண் குளிரப்
பின் ஒருகால் காணப் பிழைத்தது என் தேவிர்காள்
என் ஒப்பார் பெண் மகளிர் இவ் உலகில் தோன்றற்க என்று
அன்னப் பெடை நடையாள் ஆய் மயில் போல் வீழ்ந்தனளே
விளக்கவுரை :
[ads-post]
1808. புண் மல்கு மத்தகத்த போர் வேழம் பொற்பு அழித்த
மண் மல்கு தாரான் பெருமாட்டி வாய் மொழி கேட்டு
உள் மல்கு நெஞ்சினராய் ஒய் எனவே வெய்துயிராக்
கண் மல்கு நீரார் முக முகங்கள் நோக்கினரே
விளக்கவுரை :
1809. கண்டீர் கருமம் விளைந்த ஆறு என்றாராய்
வண் தாரார் வண்கடகம் மின்னத் தம் கைம் மறித்துக்
கொண்டாம் கடல் வேலி கீழ் மகனைக் கூற்றம் ஆய்
உண்டாம் உயிர் என்று உவப்பு எழுந்து ஆடினரே
விளக்கவுரை :
1810. வீழ்ந்து மயில் போல் விசயை கிடந்தாளைத்
தாழ்ந்து பல தட்பம் தாம் செய்ய ஏல் பெற்றுப்
போழ்ந்து அகன்ற கண்ணாள் புலம்பா எழுந்திருப்பச்
சூழ்ந்து தொழுது இறைஞ்சிச் சொன்னார் அவன் திறமே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1806 - 1810 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books