சீவக சிந்தாமணி 1801 - 1805 of 3145 பாடல்கள்
1801. கைம் மாண் கடல் படையுள் காவலனை ஆண்டு ஒழியப்
பொய்ம்மா மயில் ஊர்ந்து போகிப் புறங்காட்டுள்
விம்மாந்து யான் வீழ வீழ்ந்தேன் துணை ஆகி
எம்மானே தோன்றினாய் என்னை ஒளித்தியோ
விளக்கவுரை :
1802. கையார் இலங்கு எஃகின் கந்துக் கடன் கொடு போய்
மொய்யார் உவகையனாய் முற்றிழைக்குத் தான் கொடுப்ப
நையாள் வளர்த்த சுநந்தை நவை உற என்
ஐயா என் ஐயா என் ஐயா அகன்றனையே
விளக்கவுரை :
[ads-post]
1803. மின் நிரைத்த பைம் பூண் விளங்கு இலை வேல் வேந்தன்
முன் உரைத்த மூன்று கனவும் புணையாக
என் உயிரைத் தாங்கி இருந்தேன் வலி ஆகாது
என் அரசே என்பூசல் கேளாது இறந்தனையே
விளக்கவுரை :
1804. கோ அ மாவாகிக் குடியோம்பி நின் குடைக்கீழ்ப்
பாவமே செய்தேன் பரிவு எலாம் நீங்கினால்
போ அம்மா என்று உரைப்பப் போவேன் முன் போயினாய்
ஆ அம்மா அம்மா என் அம்மா அகன்றனையே
விளக்கவுரை :
1805. கோமான் மகனே குரு குலத்தார் போர் ஏறே
ஏமாங் கதத்தார் இறைவா என் இன் உயிரே
காமா கடலுள் கலம் கவிழ்த்தேன் கண்ணுள் நீர்
பூ மாண் புனைதாராய் நோக்காது போதியோ
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1801 - 1805 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books