சீவக சிந்தாமணி 1796 - 1800 of 3145 பாடல்கள்
1796. வெம் சிலையின் வேடர் தொறு மீட்டு விசும்பு ஏகும்
விஞ்சை அரையன் மகளை வீணை பொருது எய்திக்
குஞ்சரமும் வென்று குண மாலை நலன் உண்ட
நம்பி அவன் நாமம் எவன் என்னின் இது ஆமே
விளக்கவுரை :
1797. கந்துக் கடன் என்ற நகர்க்கு ஆதி முது நாய்கன்
முந்திப் பெறப்பட்ட மகன் மூரிச் சிலைத் தடக்கைச்
சிந்திப்பவர் அவலம் அறு சீவகன் என் தோழன்
அந்தில் ஒருநாள் அவனை அரசன் ஒரு தவற்றால்
விளக்கவுரை :
[ads-post]
1798. தொடிகள் தவழ் வீங்கு திரள் தோள் இறுக யாத்துக்
கடிகள் தவழ் குழல் மகளிர் கசிந்து மனம் கரியக்
கொடிகள் தவழ் மாட நகர்க் கொல்ல என மாழ்கி
இடிகள் தவழ்ந்திட்ட பட நாகம் என வீழ்ந்தாள்
விளக்கவுரை :
1799. மாதவப் பெருமை வண்ணம் மா நகர் நம்பிக்கு உற்ற
ஏதத்தைக் கேட்டலோடும் இருகணும் பிறந்து மாழ்கிக்
காதல் தம் மகனுக்கு உற்ற நவை எனக் கலங்கி வீழ்ந்தார்
ஆதலால் நங்கை யாரே அருள் பெரிது உடையர் என்றார்
விளக்கவுரை :
1800. மாழ்குபு மயங்கி வீழ்ந்த மாபெருந் தேவி தன்னை
ஆழ் துயர் அவித்தற்கு ஒத்த அரும் பெறல் யோகம் நாடிக்
காழ் பரிந்து அரைத்த சாந்தின் களிதரு நீரில் தேற்ற
யாழ் புரை கிளவி ஆற்றாள் மயங்கி வீழ்ந்து அரற்று கின்றாள்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1796 - 1800 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books