சீவக சிந்தாமணி 1791 - 1795 of 3145 பாடல்கள்
1791. செட்டி தனபாலன் மனையாள் சினவு வாள் கண்
பட்டம் நுதல் மின்னின் நகு பவித்திரைக்குத் தோன்றி
மட்டு மலர் மார்பின் மத யானை எயிறு உழுதாங்கு
இட்டகுறி தார் திவளப் பதுமுகன் இவ் விருந்தோன்
விளக்கவுரை :
1792. பொன் நகருள் வேந்தன் பெயரால் பொறியும் பெற்றான்
வில் மரிய தோள் விசய தத்தன் உயிர்க் கவசம்
பின் அரிய கற்பினவள் பிரீதிமதி காதல்
தன் மகனென் யான் அடிகள் தேவதத்தன் என்பேன்
விளக்கவுரை :
[ads-post]
1793. எங்கள் வினையால் இறைவன் வீடிய அஞ் ஞான்றே
எங்கள் உயிர் நம்பியொடு யாங்கள் பிறந்தேம் ஆக
எங்கள் தமர் நம்பிக்கு இவர் தோழர் என ஈந்தார்
எங்கெழில் என் ஞாயிறு என இன்னணம் வளர்ந்தேம்
விளக்கவுரை :
1794. யாண்டு நிறைந்து ஏகிய பின் நந்தன் அவற்கு இளையார்
மாண்ட குணத்தார் நபுல விபுலரொடு மன்னும்
ஈண்ட வளர்ந்தேம் ஏந்து தவிசின் உச்சி மிசை எய்தித்
தீண்ட அரிய வெம்மையொடு திக் கயங்கள் எனவே
விளக்கவுரை :
1795. வில் தொழிலும் வாள் தொழிலும் வீணை பொரு தொழிலும்
மல் தொழிலும் தேர்த் தொழிலும் வாரணத்தின் தொழிலும்
நல் தொழில வாசியொடு நன் கலைகள் நீந்திக்
கற்றனங்கள் யாமும் உடன் கற்பனகள் எல்லாம்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1791 - 1795 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books