சீவக சிந்தாமணி 1786 - 1790 of 3145 பாடல்கள்
1786. வரை உடுத்த பள்ளி இடமாக அதில் மேயோள்
விரை உடுத்த போது உறையும் வேல் நெடுங் கணாள்கொல்
உரை உடுத்த நாவுறையும் ஒள் நுதல்கொல் அன்றித்
திரை உடுத்த தேமொழிகொல் என்று தெரிகல்லார்
விளக்கவுரை :
1787. மங்கலம் மடிந்த திரு மா மகளை ஒப்பீர்
இங்கு வரவு என்னை குலம் யாது அடிகட்கு என்ன
எம் குலமும் எம் வரவும் வேண்டில் எளிது அன்றே
நும் குலமும் நும் வரவும் நீர் உரைமின் என்றாள்
விளக்கவுரை :
[ads-post]
1788. மோட்டு முது நீர் மலங்கு மொய்த்த இள வாளை
பூட்டு சிலை இறவினொடு பெருது துயில் மடியும்
ஈட்டம் உடையவர்கள் உறை இராசபுரம் என்னும்
நாட்டம் உடை நகரம் எமது ஆகும் உறை பதியே
விளக்கவுரை :
1789. பொன் உடைய மார்பின் புகழ் மந்திரி பொலந்தார்
தன்னுடைய நுண் உணர்வின் சாகரற்குத் தக்காள்
கொன் நெடிய வாள் கண் குருதத்தை சீதத்தன்
மன் நடுங்க வீங்கு திரள் தோள் மடங்கல் அன்னான்
விளக்கவுரை :
1790. அளப்பு அரிய நான்மறையினான் அசலன் என்பான்
திளைக்கும் திரு ஒப்பு உடைய திலோத்தமை தன் சிறுவன்
விளைத்து இரும்பு மேய்ந்து ஒழிந்த மிச்சில் வரை மார்பன்
இளைப்பல் இவன் தேசு உரைப்பின் புத்திசேன் இவ் விருந்தான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1786 - 1790 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books