சீவக சிந்தாமணி 1781 - 1785 of 3145 பாடல்கள்
1781. காவி கழுநீர் குவளை ஆம்பல் கடிக் கமலம்
தூவி மட நாரை துணை அன்னம் பயில் முது மீன்
மேவி உறை வண்டினொடு மல்கி விழைதகைய
வாவியொடு காவின் இடை மாந்தர் பதி கொண்டார்
விளக்கவுரை :
1782. ஐயர் உறை பள்ளி இடம் ஆண்டு அழகர் காணச்
செய் கழலர் தாரர் அவர் எங்கும் திரிகின்றார்
கொய்தகைய பூம் பொதும்பர்க் குளிரும் மரப் பலகை
செய்யவளின் சிறிது மிகை சேயவளைக் கண்டார்
விளக்கவுரை :
[ads-post]
1783. அந் நுண் துகில் கல் அரத்தம் அல்குல் அது வருத்தச்
செந் நுண் துகில் உத்தரியம் புதைந்து சுவல் வருத்த
மைந் நுண் குழல் சிறுவன் மனம் வருத்த வடி வேல் கண்
கைந் நொண்டன கவற்சி நனி வருத்தக் கலுழ்ந்து ஆற்றாள்
விளக்கவுரை :
1784. மாசொடு மிடைந்து மணி நூற்று அனைய ஐம்பால்
பூசுதலும் இன்றிப் பிணி கொண்டு புறம் தாழ
வாச மலர் மறைந்த வழி வாமன் அடிக்கு ஏற்றித்
தோசமறத் துதிகள் மனத்து ஓதித் தொழுது இருந்தாள்
விளக்கவுரை :
1785. சிந்திப்பல் என் சிறுவன் திறம் இனி என்று எழில் நெடுங்கண்
வந்து பனி வார்ந்து முலைக் கலிங்கம் அது நனைப்ப
அந்தில் இருந்தாள் அவளுக்கு அடைந்து மனம் நடுங்கி
வந்தித்து இருந்தார் மகிழ்ந்து காதல் மிக மாதோ
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1781 - 1785 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books