சீவக சிந்தாமணி 1776 - 1780 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1776 - 1780 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1776. பறையும் சங்கும் பரந்து ஒலித்து ஆர்த்து எழ
உறை கொள் வாளினோடு ஒண் சுடர்வேல் மினச்
சிறை அழிந்தது ஓர் செம்புனல் போன்று அவண்
அறை கடல் படை ஆர்ப்பொடு எழுந்தவே

விளக்கவுரை :

1777. காய்த்த செந்நெலின் தாழ் கதிர் நெற்றி மேல்
பூத்த முல்லையின் போது பொழிந்து உக
நீத்த நீர் வயல் அன்னமும் நாரையும்
ஏத்தல் சால் முருடு ஆர்ப்ப இரிந்தவே

விளக்கவுரை :

[ads-post]

1778. அளகு சேவலொடு ஆடி அம் காய்க்குலை
மிளகு வார் கொடி ஊசல் விருப்பு உறூஉம்
சுளகு வார் செவித் தூங்குகைக் குஞ்சரம்
இளகு காடு இளகப் பரி கொண்டவே

விளக்கவுரை :

1779. மருவி மாதவர் பள்ளியுள் விட்டதே
அருவிக் குன்றமும் ஐவனச் சாரலும்
குருவி ஆர்த்து எழு கொய் புனக் கானமும்
திருவில் தீர்ந்தவர் தேயமும் தேர்ந்து போய்

விளக்கவுரை :

1780. வண்டு துயில் கொண்டு குயில் ஆலி மயில் அகவி
விண்டு மது விட்டு விரி போது பல பொதுளிக்
கொண்டு தளிர் வேய்ந்து சினை தாழ்ந்து நனை ஆர்ந்து ஒன்று
உண்டு பொழில் இமையவர்கள் உலகம் உறுவதுவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books