சீவக சிந்தாமணி 1771 - 1775 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1771 - 1775 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1771. அள்ளல் சேறு அருமணல் புனல் அருவரைப் படினும்
உள்ளம் போல் செல்வ உரன் அசைவு இல்லன அமருள்
கொள்ளி மண்டிலம் போல் கொடிபடத் திரிந்திடுவ
வெள்ளி மால் வரைத் தாழ்வதில் மேம்படப் பிறந்த

விளக்கவுரை :

1772. ஈர் ஐஞ் ஞூற்றினை இருபதின் முரணிய தொகைய
வீரர் ஏறின விளங்கு ஒளிப் பக்கரை அமைந்த
தாரும் புட்டிலும் அரற்றுவ சாமரை அணிந்த
ஓரும் கூடின மள்ளரும் ஒலித்து எழுந்தனரே

விளக்கவுரை :

[ads-post]

1773. வடித்த போத்தொடு வன் செலல் அத்திரி
கடுத்த ஒட்டகம் கால் செல்வ யாவையும்
நொடிப்பின் மாத்திரை நூற்று வில் ஏகுவ
எடுத்த பண்டம் இயைந்து உடன் என்பவே

விளக்கவுரை :

1774. ஞாலம் விற்பன பைங்கிளி நல் நிறத்து
ஆலும் மா பவளக் குளம்பு ஆர்ந்தன
காலின் நொய்யன கண் வெளவு காட்சிய
நால்கு பண்ணினர் நால்வரும் ஏறினார்

விளக்கவுரை :

1775. நாளும் புள்ளும் நயத்தகு நல் நிலைக்
கோளும் ஓரையும் கொண்ட நிமித்தமும்
ஆளும் மாந்தரின் ஆய்ந்து கொண்டு ஆயிடைத்
தாளின் ஊக்குபு சாத்தொடு எழுந்தவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books