சீவக சிந்தாமணி 1766 - 1770 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1766 - 1770 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1766. பைத்து அரவத் திரை சிந்திய பல்கதிர்
மொய்த்து எரி நித்திலம் வைத்த அன பல்லினள்
இத் திருவின் உருவம் தொழுதார் தமது
எத்துயரும் கெடும் என்று இன சொன்னார்

விளக்கவுரை :

1767. ஐயனை யாம் அவண் எய்துவம் ஆயிழை
நொய்தின் உரை பொருள் உண்டு எனின் நொய்து என
மை எழுத்து ஊசியின் மாண்டது ஓர் தோட்டிடைக்
கை வளர் கோதை கரந்து எழுத்திட்டாள்

விளக்கவுரை :

[ads-post]

1768. ஆங்கு உருக்கார் அரக்கு இட்டு அதன் மீ மிசைப்
பூங் குழையால் பொறி ஒற்றுபு நீட்டத்
தேம் குழலாள் தொழுதாள் திசை செல்க எனப்
பாங்கர் அங்குப் படர்குற்றனர் அன்றே

விளக்கவுரை :

1769. வேந்து இரியக் கணை வித்திய வெம் சிலைக்
காய்ந்து இரிக்கும் புருவக் கருங் கண்ணியர்
ஆய்ந்து அரிக்கும் நறவம் மலர் மாலையை
வேய்ந்து அரிக்கும் மிஞிறு ஆர்ப்ப விடுத்தாள்

விளக்கவுரை :

1770. அலங்கு வெண்மதி ஐப்பசி அடைய அப்பகலே
நிலம் கொண்டு ஓங்கின நிரம்பின புகர் சுழி உடைய
உலம்பி முன் இருதாள்களும் உமிழ்வன போல்வ
விலங்கு பாய்வன விடுகணை விலக்குவ கலிமா

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books