சீவக சிந்தாமணி 1941 - 1945 of 3145 பாடல்கள்
1941. தெளித்த இன் முறுவல் அம் பவளம் செற்ற வாய்க்
களிக் கயல் மழைக் கணார் காமம் காழ் கொளீஇ
விளித்த இன் அமிர்து உறழ் கீதம் வேனலான்
அளித்த பின் அமளி அம் சேக்கை எய்தினான்
விளக்கவுரை :
1942. தீங் கரும்பு அனுக்கிய திருந்து தோள்களும்
வீங்கு எழில் தோள்களும் மிடைந்து வெம் முலை
பூங் குளிர் தாரொடு பொருது பொன் உக
ஈங்கனம் கனை இருள் எல்லை நீந்தினான்
விளக்கவுரை :
[ads-post]
1943. கனை கதிர்க் கடவுள் கண் விழித்த காலையே
நனை மலர்த் தாமரை நக்க வண் கையால்
புனை கதிர்த் திருமுகம் கழுவிப் பூ மழை
முனைவனுக்கு இறைஞ்சினான் முருக வேள் அனான்
விளக்கவுரை :
1944. நாள் கடன் கழித்த பின் நாம வேலினான்
வாள் கடி எழில் நகர் வண்மை காணிய
தோள் பொலி மணிவளைத் தொய்யில் மாதரார்
வேட்பது ஓர் வடிவொடு விரைவின் எய்தினான்
விளக்கவுரை :
1945. அலத்தகக் கொழுங் களி இழுக்கி அம் சொலார்
புலத்தலின் களைந்த பூண் இடறிப் பொன் இதழ்
நிலத்து உகும் மாலை கால் தொடர்ந்து நீள் நகர்
செலக் குறைபடாதது ஓர் செல்வம் மிக்கதே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1941 - 1945 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books