சீவக சிந்தாமணி 1756 - 1760 of 3145 பாடல்கள்
1756. வாவிப் புள் நடையினாளை வஞ்சித்துத் தக்க நாட்டை
மேவி யான் காணல் உற்றுச் சார்தலும் இப்பர் உள்ளான்
தூவிப் பொன் மாட மூதூர்ச் சுபத்திரன் என்னைக் கண்டே
ஆவிக் கண் அறிவு போல அளவளாய் அன்பு பட்டான்
விளக்கவுரை :
1757. பண் அமை தேரின் ஏறி அவனொடு யான் இருந்து போகி
விண் உயர் செம்பொன் மாடத்து இழிந்து அவண் விளங்கப் புக்கேன்
வெண் நிலா முத்தம் சூழ்ந்த வெம் முலைத் தடம் கணாளை
மண் எலாம் செல்ல நின்ற மகிழ்ச்சியின் மகிழ்ந்து தந்தான்
விளக்கவுரை :
[ads-post]
1758. அவ் வழி இரண்டு திங்கள் கழிந்த பின் அவள் இல் நீங்கி
இவ் வழி நாடு காண்பான் வருதலும் இறைவன் கண்டே
செவ் வழிபாடர் ஆகிச் சிலைத் தொழில் சிறுவர் கற்ப
மை வழி நெடுங் கணாளைத் தந்தனன் மதலை என்றான்
விளக்கவுரை :
1759. தான் உழந்து உற்ற எல்லாம் தம்பியை உணரக் கூறித்
தேன் உழந்து அரற்றும் தாரான் குரவரைச் சிந்தித்தாற்கு
வான் இழிந்தாங்குக் கண்ணீர் மார்பகம் நனைப்பக் கையால்
ஊன் உமிழ்ந்து இலங்கும் வேலான் ஒற்றி மற்று இதனைச் சொன்னான்
விளக்கவுரை :
1760. திண் பொருள் எய்தலாகும் தெவ்வரைச் செகுக்கல் ஆகும்
நண்பொடு பெண்டிர் மக்கள் யாவையும் நண்ணல் ஆகும்
ஒண் பொருள் ஆவது ஐயா உடன் பிறப்பு ஆக்கல் ஆகா
எம்பியை ஈங்குப் பெற்றேன் என் எனக்கு அரியது என்றான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1756 - 1760 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books