சீவக சிந்தாமணி 1751 - 1755 of 3145 பாடல்கள்
1751. கூட நீர் நின்ற பெற்றி கண்டு இப்பால் நோக்குவேற்கு ஓர்
கேடகம் வாளொடு ஏந்திக் கெடுக இந் நகரம் என்னா
மாடத்தின் உச்சி நின்ற மலை மகள் தன்மை கண்டே
ஆடவர்க்கு உழுவை ஒப்பாய் அஞ்சினேன் அதன்கண் என்றான்
விளக்கவுரை :
1752. பெண் இடர் விடுப்ப வாழ்வின் சாதலே பெரிது நன்று என்று
எண்ணினேன் நமர்கள் வீயும் இயல்பினான் நெருங்கப் பட்டுக்
கண்ணி நான் இயக்கன் தன்னைச் சிந்தித்தேன் கடவுள் வாழ்த்தி
அண்ணல் வந்து அழுங்கத் தோன்றி ஆங்கு என்னைக் கொண்டு போந்தான்
விளக்கவுரை :
[ads-post]
1753. மந்திரம் மூன்றும் தந்து வானவன் விடுப்பச் செல்வேற்கு
இந்திர திருவில் சூழ்ந்த இன மழைக் குழாத்தின் வேழம்
கொந்தழல் காட்டுத் தீயால் வளைப்புண்ட குழாத்தை நோக்கிச்
சிந்தித்துக் கவன்று நிற்பத் திருமழை பொழிந்தது அன்றே
விளக்கவுரை :
1754. வெல் களிற்று அச்சம் நீக்கி விரைவொடு வனத்தின் ஏகிப்
பல்லவ தேயம் நண்ணித் தனபதி என்னும் மன்னன்
நல் வனப்புடைய தேவி திலோத்தமை பெற்ற நம்பி
செல்வன் மற்று உலோக பாலன் திருமகள் பதுமை என்பாள்
விளக்கவுரை :
1755. அரிகுரல் கோழி நாமத்து அரவு அவள் கடித்தது ஆகத்
திருவிழை அவளைத் தீர்த்தேன் தீர்விலா நண்பு வேண்டிப்
பொரு களி யானை மன்னன் புனை இழை அவளைத் தந்தான்
இரு மதி கழிந்த பின்றை இடை இராப் பொழுதில் போந்தேன்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1751 - 1755 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books