சீவக சிந்தாமணி 1746 - 1750 of 3145 பாடல்கள்
1746. மணி ஒலி வீணை பண்ணி மாண்ட கோல் தடவ மாதர்
அணிமுலைத் தடத்தின் ஒற்றி வெப்பரால் தட்பம் மாற்றிப்
பிணை மலர்க் கோதை கீதம் பாட யான் பெரிதும் பேதுற்று
இணை மலர்க் கண்ணிக்கு ஒவ்வா இளி வரு கிளவி சொன்னேன்
விளக்கவுரை :
1747. சொல்லிய என்னை நோக்கித் துளங்கல் நும் அடிகள் பாதம்
புல்ல யான் புணர்ப்பல் என்று பொழுது போய்ப் பட்ட பின்றை
எல் இருள் விஞ்சை ஓதி இவ்வழி இடுவித்திட்டாள்
சொல்லுமின் அடிகள் நீரும் போந்தவாறு எனக்கும் என்றான்
விளக்கவுரை :
[ads-post]
1748. தாதையார் உவப்பச் செய்வான் தாழ் கச்சில் பிணிப்புண்டு ஐய
போதரா நின்ற போழ்தில் போர்ப்புலிக் குழாத்தின் சீறிக்
காதல் நம் சுற்றம் எல்லாம் கை இலங்கு எஃகம் ஏந்திச்
சாதலே புரிந்து தோன்றும் தன்மை அந் நகரில் கண்டேன்
விளக்கவுரை :
1749. கண்ட பின் நின்னைக் காண்பேன் கருவரை உலம்பிப் பல்கால்
விண்டுவும் உடைய வாலின் வெடித்துராய் வெகுண்டு நோக்கா
எண் திசையோரும் எள்கக் குஞ்சரம் இரியப் பாயும்
ஒண்திறல் சிங்கம் அன்ன கதழ் ஒளி உடற்சி கண்டேன்
விளக்கவுரை :
1750. சினம் தலைப் பெருக்கித் தீக் கோள் உறுப்பினைச் சுருக்கித் தீப்போல்
அனன்று நில்லாத கண்ணால் நிறுத்தின செவியிற்றாகி
முனம் புக அடக்கிப் பின் போந்து இருந்து பாய்வான் அமைந்த
இனம் தலைப் புலியோடு ஒக்கும் தோழர் நின்னிடத்தில் கண்டேன்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1746 - 1750 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books