சீவக சிந்தாமணி 1741 - 1745 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1741 - 1745 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1741. பாட்டினைக் கேட்டலோடும் பழம் பகை நட்பும் ஆமே
ஓட்டியும் கோறும் அன்றே நம்பி தான் உண்மை பெற்றால்
நாட்டிடம் பரந்து போகி நாடுதும் நாங்கள் என்னா
ஈட்டமும் வேறும் ஆகி இலைப்புரை கிளைத்திட்டேமே

விளக்கவுரை :

1742. மணி பொதி துகிலின் தோன்றும் மஞ்சு சூழ் வரைகள் நாடி
அணி நகர் யான் சென்று எய்தி மாலை தன் மனையைச் சேர்ந்தேன்
துணை மலர்க் காந்தள் ஊழ்த்துச் சொரிவ போல் தோன்றி முன்கை
அணி வளை நலத்தோடு ஏக அங்ஙனம் இருந்து நைவாள்

விளக்கவுரை :

[ads-post]

1743. என்னைக் கண்டு அடிசில் ஆக்க ஐயர்க்கு என்று அவலம் நீங்கப்
பொன்னைக் கண்ட அனைய சாயலவர் புரிந்து அடிசில் ஏந்தத்
துன்னி நோய் உற்ற மஞ்ஞைத் தோற்றம் போல் இருந்த நங்கை
பின்னை நாள் குவளை நீர் வீழ் பெற்றிய கண்ணள் ஆகி

விளக்கவுரை :

1744. அடிகளை இன்றி நீரே உண்ணவும் வல்லீர் ஆனீர்
கடியிர் நீர் ஐயனீ¦ரே எனக் கசிந்து உருகிக் காய் பொன்
கொடி துகள் ஆர்ந்த வண்ணம் குழைந்து மாநிலத்து வீழ்ந்த
பெடை மயில் சயலாள் தன் பேது கண்டு ஆங்கு மீண்டேன்

விளக்கவுரை :

1745. செல்வனை இன்று நாடிச் சேவடி தொழுதல் ஒன்றோ
அல்லது இவ் உடம்பு நீங்க வேற்றுலகு அடைதல் ஒன்றோ
எல்லை இவ் இரண்டின் ஒன்றை இப்பகல் முடிப்பல் என்னா
மல்லிகைக் கோதை ஐம் பால் மலைமகள் மனையைச் சேர்ந்தேன்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books