சீவக சிந்தாமணி 1736 - 1740 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1736 - 1740 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1736. பவ்வத்துப் பிறந்த வெய்ய பருதி போல் திறலினாற்குத்
தெவ்வரைக் கிழங்கினோடும் தின்று நீ சொன்னவாறே
எவ்வத்தைத் தணித்தும் என்றான் சீதத்தன் என்னலோடும்
மவ்வல் அம் மணந்த தண் தார் பதுமுகன் இதனைச் சொன்னான்

விளக்கவுரை :

1737. நம்பி நந்தட்டன் கேட்க நங்கட்குக் குரவர் உள்ளார்
தம் பரிவு அகற்றி ஓம்பி நீர்க் கடன் மரபு தாங்கு இக்
கம்பம் செய் பரிவு நீங்கிக் கற்பிப்பார்க்கு உவர்த்துச் சொல்லார்
இம்பர் இவ் உலகம் ஒப்பாய்க்கு என்னை யான் உரைப்பது என்றான்

விளக்கவுரை :

[ads-post]

1738. ஓம் படை சாற்றல் பாலது உள்ளவர்க்கு ஆகும் அன்றே
ஆம் புடை என்கண் இல்லை அங்கை என் கண்களாகத்
தேம் படு தாரீனீர்க்கும் செல்வற்கும் செய்வ செய்தேன்
காம்பு அடு காட்டுத் தீயின் கனன்று உடன் எழுக என்றேன்

விளக்கவுரை :

1739. கோட்டு இளங் குழவித் திங்கள் இரண்டு அன்ன எயிற்றுக் கோளே
வேட்ட ஓர் சிங்கம் சூழ்ந்த வேங்கையின் இனத்தின் வெய்ய
வாள் படை எழுந்து வாழ்க சீவகன் என்னும் ஆங்கண்
பாட்டினை ஒருவன் எங்கள் பரிவு அறப் பாடினானே

விளக்கவுரை :

1740. வருவர் நம் கேள்வர் இன்னே வாள் நுதல் பசலை தீர
உருகி நைந்து உடன்று முன் கை வளை உக மெலிய வேண்டா
அருவி மும் மதத்த யானை அதிர்ந்துழிக் கார் என்று எண்ணித்
தெரிவில பேதை முல்லை பூத்தன தெளி இது என்றான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books