சீவக சிந்தாமணி 1731 - 1735 of 3145 பாடல்கள்
1731. குடவரை அனைய மார்பில் குங்குமம் எழுதிக் கோல
வடவரை வைரச் சாதி வால் ஒளி கலந்த பைம் பூண்
தடவரை மார்பின் மின்ன தம்பியோடு அமிர்தம் உண்டான்
பட அரவு அல்குலாளும் பான்மையால் விருந்து செய்தாள்
விளக்கவுரை :
1732. விருந்து அவள் செய்த பின்றைத் தம்பியும் தானும் வேறா
இருந்துழி என்னைக் காணது உற்றதை எவன் கொல் என்று
பொருந்தினார் செய்தது எல்லாம் புரை விடுத்து உரைமோ என்னக்
கருங் கழல் செங் கண் பைந்தார்க் காளை ஈது உரைக்கின்றானே
விளக்கவுரை :
[ads-post]
1733. புண் உமிழ் குருதி போர்த்த பொரு களம் போன்று தோன்றி
அண்ணல் அம் கதிரும் அத்தம் அடைந்து செவ்வான் கொள் அந்தித்
துண் எனக் களத்தின் நீங்கித் தொல் நகர்ப் புறத்துத் தொக்கே
எண்ணுமின் செய்வது என்றான் பதுமுகன் எரியும் வேலான்
விளக்கவுரை :
1734. மின் என மிளிரும் பைம்பூண் புத்திசேன் வெகுண்டு வெய்ய
கல் நவில் தோளினானைக் காண்கலேம் ஆயின் இன்னே
மன்னனை வாளினாலே வானகம் காட்டி மூதூர்
தன்னையும் சவட்டிப் போகிச் சாமியைச் சார்தும் என்றான்
விளக்கவுரை :
1735. சிலையொடு திரண்ட திண் தோள் தேவ மாதத்தன் என்பான்
மலை உடை உருமின் சீறி மாற்றலன் உயிரை உண்டல்
இலை உடைக் கண்ணியீர்க்கு இஃது எளிது நம் குருசில் உண்மை
உலைவினோடு இன்மை ஆராய்ந்து ஒறுப்பதே துணிமின் என்றான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1731 - 1735 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books