சீவக சிந்தாமணி 1726 - 1730 of 3145 பாடல்கள்
1726. என் உறு நிலைமை ஓராது எரி உறு தளிரின் வாடிப்
பொன் உறு மேனி கன்றிப் போயினீர் பொறி இலாதேன்
முன் உற இதனை ஓரேன் மூரிப் பேர் ஒக்கல் எல்லாம்
பின் உறு பரிவு செய்தேன் பேதையேன் கவலல் என்றான்
விளக்கவுரை :
1727. ஆக்கமும் கேடும் உற்றீர் அடிகளே அல்லீர் மேலைப்
பூக் குலாம் அலங்கல் மாலைப் புள் கொடியாற்கும் உண்டே
வீக்கு வார் முலையினார் போல் வெய்து உயிர்த்து உருகி நைய
நோக்கினீர் என்னை என்றான் நுதி அழல் குட்டம் ஒப்பான்
விளக்கவுரை :
[ads-post]
1728. குரவரைப் பேணல் இன்றிக் குறிப்பு இகந்து ஆய பாவம்
தரவந்த பயத்தினால் இத் தாமரைப் பாதம் நீங்கிப்
பருவருந் துன்பம் உற்றேன் பாவியேன் என்று சென்னி
திருவடி மிசையின் வைத்துச் சிலம்ப நொந்து அழுதிட்டானே
விளக்கவுரை :
1729. பரிந்து அழுகின்ற தம்பி பங்கயம் அனைய செங் கண்
பொருந்துபு துடைத்து வேண்டா புலம்புதல் காளை என்று
மருந்து அனாள் உறையும் கோயில் மடுத்து உடன் கொண்டு புக்கான்
அருந்ததிக் கற்பினாளை அடி பணிந்து அவனும் கண்டான்
விளக்கவுரை :
1730. கொழுநனைக் குறிப்பினாலே குமரன் யார் என்று நோக்கக்
கழுமிய கற்பினாய் நின் மைத்துனன் ஐயன் என்ன
எழுமையும் பெறுக இன்ன இளங்கிளைச் சுற்றம் என்றாள்
கொழு மலர்த் தடம் கண் செவ்வாய்க் குவிமுலைக் கொம்பு அனாளே
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1726 - 1730 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books