சீவக சிந்தாமணி 1721 - 1725 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1721 - 1725 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1721. கணை கடி கண்ணி சொல்லக் காணிய யானும் சென்றேன்
மணி இலங்கு ஒண் பொன் வைவாள் கேடக மருங்கு வைத்த
இணை கடி சீயம் அன்னான் இளமையும் வனப்பும் ஏரும்
துணை அமை வடிவும் சொல்லி நின்பொறி ஒற்றிக் கொண்டான்

விளக்கவுரை :

1722. நீண்ட தோள் நெடிய செங்கண் நீலமாய்ச் சுரிந்த குஞ்சிப்
பூண்டது ஓர் ஆர மேனிப் பொன் உரைத்து இட்டது ஒக்கும்
காண்தகு காதில் தாழ்ந்த குண்டலம் குவளைப் பைந்தார்
ஆண் தகை அழகன் யார் கொல் அறியலன் அவனை என்றான்

விளக்கவுரை :

[ads-post]

1723. இனத்து இடை ஏறு போலும் எறுழ் வலி உரைத்த மாற்றம்
மனத்து இடை மகிழ்ந்து கேட்டு மைந்தன் நந்தட்டனே ஆம்
புனத்து இடை மயில் அனாளால் பொருள் உரை பெற்று வந்தான்
எனத் தவிராது சென்று ஆங்கு எய்தினள் என்ப அன்றே

விளக்கவுரை :

1724. கருமுகில் பொடித்த வெய்யோன் கடலிடை நடப்பதே போல்
திருமுகம் சுடர நோக்கிச் சீவகன் சென்று சேர்ந்தான்
தருமனை அரிதின் கண்ட தனஞ்சயன் போலத் தம்பி
திருமலர்த் தடக்கை கூப்பிச் சேவடி தொழுது வீழ்ந்தான்

விளக்கவுரை :

1725. தாமரைத் தடக்கை கூப்பித் தாள் முதல் கிடந்த தம்பி
தாமரைத் தடத்தை ஒத்தான் தமையனும் பருதி ஒத்தான்
தாமரைக் குணத்தினானை மும் முறை தழுவிக் கொண்டு
தாமரைச் செங் கணானும் தன் உறு பரிவு தீர்ந்தான்

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books