சீவக சிந்தாமணி 1716 - 1720 of 3145 பாடல்கள்
1716. மின்னும் பூணும் மிளிர் கதிர் ஆரமும்
பொன்னும் பூத்தது ஓர் கற்பகப் பூமரம்
அன்ன காளை அமர் துயில் தேறினான்
மன்னும் வெம் சுடர் மாக்கல் இவர்ந்ததே
விளக்கவுரை :
1717. செய்ய வாய் நெடிய கண்ணாள் செல்க என விடுக்கப் பட்ட
வெய்ய வாள் தடக்கை வீரன் இருத்தலும் விசயன் என்பான்
கையவாம் சிலையினானைக் கண்டு வந்து அருகு சேர்ந்தான்
பையவாய்ப் பரந்த அல்குல் பாவையர்க்கு அமிர்தம் அன்னான்
விளக்கவுரை :
[ads-post]
1718. தெய்வமே கமழும் மேனித் திரு ஒளி கலந்த மார்பின்
ஐய நீ யாரை என்றாற்கு அவன் உரை கொடாது விட்டான்
பையவே பெயர்ந்து போகிப் பனிமலர்க் கோதை மார்பின்
மையல் அம் களிறு போலும் மைத்துனற்கு இதனைச் சொன்னான்
விளக்கவுரை :
1719. சந்தனக் களியும் பூவும் தமனியக் குடத்துள் நீரும்
கெந்தம் நாறு அகிலும் முத்துக் கிளர் ஒளி விளக்கும் ஏந்தி
அந்தில் வில் பயிற்றும் தானம் வழி பட ஆங்குச் சென்றாள்
மந்திர மடந்தை அன்னாள் வசுந்தரி வந்து சொன்னாள்
விளக்கவுரை :
1720. ஆர் அகில் சேக்கை நீங்கி வெறு நிலத்து அடிகள் தாமே
நீரிதின் கிடந்தது என் கொல் என்று யான் நினைந்து போகிச்
சேர் துணை கழறச் சென்றேன் செல்வியோடு ஆங்குக் கண்டேன்
போர் பல கடந்த வேலோய் மாயம் கொல் போற்றி என்றாள்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1716 - 1720 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books