சீவக சிந்தாமணி 1711 - 1715 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1711 - 1715 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1711. செய்த விஞ்சையைத் தேமொழி மாற்றலும்
மையல் நெஞ்சொடு வண்டு இமிர் தாரினான்
பொய்யது அன்மையின் பூங் கழலான் அடிக்கு
எய்துகேன் அருளாய் என்று இறைஞ்சினான்

விளக்கவுரை :

1712. மதுக்கை மாலையும் வண்டு இமிர் சாந்தமும்
புதுக்கச்சு ஆர்ந்த பொன் வாளும் சுரிகையும்
கதுப்பின் நானமும் காமர் கலங்களும்
பதிக்கண் தம் எனப் பாவையும் ஏவினாள்

விளக்கவுரை :

[ads-post]

1713. மணியின் மேல் புறம் போர்த்து அன்ன மாக்கதிர்
துணிய வீசும் துளங்கு ஒளி மேனியன்
பணியின் பல் கலம் தாங்குபு சென்ற பின்
அணிசெய் கோதை அம் காமினி ஓதினாள்

விளக்கவுரை :

1714. சாந்தினால் மெழுகித் தட மாமலர்
ஆய்ந்த தாமங்கள் நாற்றி அகில் புகை
ஏந்தி இட்டு இளையாரொடு நீங்கினாள்
காந்தி வண்டு உணும் கற்பகக் கோதையே

விளக்கவுரை :

1715. தூமம் ஆர்ந்த துகில் அணைப் பள்ளி மேல்
காமன் தம்பியின் காளை கிடந்தபின்
ஏம மாபுரத்து இட்டது ஓர் மா தெய்வம்
நாம நல் ஒளி நந்தனை என்பவே

விளக்கவுரை :

சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books