சீவக சிந்தாமணி 1706 - 1710 of 3145 பாடல்கள்
1706. பொறி குலாய்க் கிடந்த மார்பின் புண்ணியன் பொன்றினானேல்
வெறி குலாய்க் கிடந்த மாலை வெள் வளை முத்தம் நீக்கி
நெறியினால் நோற்றல் என்றோ நீள் எரி புகுதல் ஒன்றோ
அறியலென் கொழுநன் மாய்ந்தால் அணி சுமந்து இருப்பது என்றான்
விளக்கவுரை :
1707. காய் தழல் கவரப் பட்ட கற்பக மரத்தின் கன்றி
ஆய் கழல் குருசில் வாடி அற்புத் தீ அழலுள் நிற்ப
வாய் மொழிந்து உரைக்கல் உற்றாள் வனைகுழல் கற்றை வண் தார்த்
தோய் பிழி துளிக்கும் கண்ணிச் சுரும்பு சூழ் கொம்பனாளே
விளக்கவுரை :
[ads-post]
1708. மது முகத்து அலர்ந்த கோதை மாற்றம் மைந்தற்கு உரைப்பாள்
கொதி முகக் குருதி வை வேல் குருசிலோ நம்மை உள்ளான்
விதி முக மணங்கள் எய்தி வீற்று இருந்து இன்பம் உய்ப்ப
மதிமுகம் அறியும் நாமே வாடுவது என்னை என்றாள்
விளக்கவுரை :
1709. வேண்டியது எமக்கு நேரின் வில் வலாய் நும் ஐயனாரைக்
காண்டி என்று உரைப்பக் காளை எழுமையும் அடிமை நேர
மாண்டது ஓர் விஞ்சை ஓதி மதிமுகம் தைவந்திட்டாள்
நீண்டது பெரிதும் அன்றி நினைத்துழி விளக்கிற்று அன்றே
விளக்கவுரை :
1710. பொற்புடை அமளி அங்கண் பூவணைப் பள்ளி மேலால்
கற்பக மாலை வேய்ந்து கருங் குழல் கை செய்வானை
முற்படக் கண்டு நோக்கி முறுவல் கொள் முகத்தன் ஆகி
விற் படை நிமிர்ந்த தோளான் தொழுது மெய் குளிர்ந்து நின்றான்
விளக்கவுரை :
சீவக சிந்தாமணி 1706 - 1710 of 3145 பாடல்கள்
சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர், seevaga sinthaamani, thiruthakka thevar, tamil books